மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் வருவதையொட்டி சேலம் சரக டி.ஐ.ஜி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு செப்டம்பர் 1 -ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்வர் ஜோசப் விஜய் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். இதனையொட்டி மேட்டூர் அணையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ் ஹடிமணி தலைமையில் போலீஸார் இன்று மேட்டூர் அணைக்கு வந்தனர். இவர்கள் அணையின் வலது கரை, தண்ணீர் திறக்கும் 8- கண் மதகு, விழா மேடை அமையும் இடம், பவள விழா கோபுரம், வலது கரை நுழைவாயில், அணைப் பூங்கா, சுரங்க மின் நிலையம், அணை மின் நிலையம் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது எஸ்.பி, குத்தாலிங்கம், டி.எஸ்.பி, சண்முகசுந்தரம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.Ahead of the Chief Minister's visit to release water from Mettur Dam for irrigation, police led by the Salem Range DIG inspected the security arrangements.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு முதல்வர் விஜய் வருகை தருகிறாரா?