புடாபெஸ்ட் ஓபனில் தமிழக ஸ்குவாஷ் வீரர் வேலவன் செந்தில்குமார் சாம்பியன்!

Wait 5 sec.

தமிழக ஸ்குவாஷ் வீரர் வேலவன் செந்தில்குமார் (26 வயது) முதல்முறையாக பிஎஸ்ஏ காப்பர் அளவிலான ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் சேலத்தைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார் ஹங்கேரியின் தலைநகரில் நடந்த புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப் போட்டியில் சொந்த மண்ணின் வீரர் பாலாஸ் ஃபர்காஸ் உடன் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் மோதினார். இதில் 11-4, 11-2, 11-3 என்ற புள்ளிகளில் வேலவன் செந்தில்குமார் அபார வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலமாக அவருக்கு 43,500 அமெரிக்க டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 41.50 லட்சம் கிடைத்துள்ளது. இது அவரது 11ஆவது பிஎஸ்ஏ டூர் வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது.கடந்த 2025 ஸ்குவாஷ் கலப்பு அணியில் சாம்பியன்ஷிப் பெற்ற அணியிலும் வேலவன் செந்தில்குமார் பங்கேற்றிருந்தார். ஆசிய சாம்பியன்ஷிப்பில் மூன்று தங்கம் வென்றுள்ளார். ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பிலும் வேலவன் செந்தில்குமார் இரண்டு முறை தங்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. #India's #VelavanSenthilkumar wins PSA Budapest Squash Open title, beating Balazs Farkas of Hungary.#Squash #BudapestSquashOpen #SquashOpen pic.twitter.com/dSTIfQGvRi— All India Radio News (@airnewsalerts) August 29, 2026ரயான் செர்கி, எர்லிங் ஹாலண்ட் தலா 2 கோல்கள்: முதலிடத்தில் மான்செஸ்டர் சிட்டி!Tamilnadu player Velavan Senthilkumar wins Budapest Open squash