கவின் - நயன்தாரா நடிப்பில் வெளியான ஹாய் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் திரைகள், காட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவான ஹாய் திரைப்படம் நேற்று (ஆக.28) திரையரங்குகளில் வெளியானது. நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தினை தயாரித்துள்ளது. ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.பாடலாசிரியகாவும் லோகேஷ் கனகராஜிடம் உதவியாளராகவும் இருந்த விஷ்ணு எடவன் முதல்முறையாக இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு, பூர்ணிமா, காவ்யா அறிவுமணி, விடிவி கணேஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்திற்கான திரைகளும் காட்சிகளின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளன. With tremendous love and an overwhelming response, #HiMovie gets extra screens and shows! ❤️Catch the film in theatres near you Featuring @nayanthara and @Kavin_m_0431 ❤️A film directed by @VishnuEdavan1Music by @JenMartinmusic@ZeeStudios_ @zeestudiossouth… pic.twitter.com/TeNiBPfXJi— Seven Screen Studio (@7screenstudio) August 29, 2026உதவியாளர் அவமதிப்பு? ரெஜினா கேசண்ட்ராவின் வைரல் விடியோவுக்கு குவியும் கண்டனங்கள்!With tremendous love and an overwhelming response, Hi Movie gets extra screens and shows!