நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் உடல்கள் எப்படி அடையாளம் காணப்படுகிறது? என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில், பனிப்பாறைகள் உடைந்து போடே கோஷி ஆற்றில் கடந்த ஆக. 26 ஆம் தேதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன. இந்தப் பேரிடரில் சிக்கி இதுவரை 579 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டு வரும் நிலையில், காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதுகுறித்து நேபாள காவல்துறை அதிகாரி பேசியதாவது:முதலில் இங்கு வைக்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத உடல்களின் புகைப்படங்களை நாங்கள் காட்சிப்படுத்துகிறோம். புகைப்படங்களைப் பார்த்து ஒருவரை மக்கள் அடையாளம் கண்டுகொண்டால், அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அந்த உடலை அவர்களுக்குக் காண்பிப்போம். சரியாக அடையாளம் காணப்பட்ட பிறகு, உடல்கூராய்வுக்குப்பின் அது ஒப்படைக்கப்படுகிறது. அடையாளம் காணப்படவில்லை என்றால், அடுத்த கட்ட உடல்கள் ஆய்வுகளுக்காக இங்கேயே வைக்கப்படும். நவல்பராசி, சித்வான் மற்றும் நுவாகோட் ஆகிய இடங்கள் உள்பட அனைத்துப் பகுதியிலிம் மீட்கப்பட்ட உடல்களின் தகவல்களை நாங்கள் இணையதளத்திலும் பதிவேற்றுகிறோம். இங்கு கிடைக்கும் பதிவுகள், இந்த இடத்தில் வைக்கப்பட்ட உடல்களைப் பற்றியவை மட்டுமே; மற்றவை இணையதளத்தில் கிடைக்கின்றன என்று தெரிவித்தார்.VIDEO | Kathmandu: A Nepal Police official speaks about the identification of bodies recovered after the floods. He says, "We are displaying photographs of the unidentified bodies kept here. If people recognise someone from the photographs, we show them the body for… pic.twitter.com/i1CjxHa18D— Press Trust of India (@PTI_News) August 29, 2026நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்The police have provided an explanation regarding how the bodies of the victims of the Nepal floods are being identified.