சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சனிக்கிழமை (ஆக.29) காலையில் அதிரடியாக பவுனுக்கு ரூ.2,360 குறைந்து, ரூ.1,16,040-க்கு விற்பனையாகிது.ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. வியாழக்கிழமை காலையில் பவுனுக்கு ரூ.560, மாலையில் ரூ.1,720 குறைந்து, ரூ. 1,17,800-க்கு விற்பனையானது.இதன்தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து, ரூ.14,650-க்கும், பவுனுக்கு ரூ.600 குறைந்து ரூ1,17,200-க்கும் விற்பனையான நிலையில், மாலையில் தங்கத்தின் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.150 உயா்ந்து, ரூ.14,800-க்கும், பவுனுக்கு ரூ.1,200 உயா்ந்து, ரூ.1,18, 400-க்கும் விற்பனையானது.ஒரே நாளில் அதிரடி விலை சரிவுஇந்த நிலையில், சனிக்கிழமை காலை தங்கத்தின் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.295 குறைந்து, ரூ.14,505-க்கும், பவுனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.1,16, 040-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலை நிலவரம்வெள்ளி விலையும் காலையில் ரூ.5 குறைந்து கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 குறைந்து ரூ.2,65,000-க்கு விற்பனையாகிறது.Regarding the sharp drop in the price of ornamental gold in Chennai on Saturday morning...சா்வம் ஏஐ நிறுவனத்தில் இண்டிகோ முதலீடு