தமிழகத்திலிருந்து நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் சென்று திபெத்தில் சிக்கியிருந்த 39 தமிழர்கள் பற்றிய தகவல் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.தமிழ்நாட்டிலிருந்து நேபாளத்துக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்று, பெரு வெள்ளம் நேரிட்டபோது திபெத்தில் இருந்த 39 தமிழகர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.இவர்கள் அனைவரும் ஆக. 31ஆம் தேதி காத்மாண்டுவில் இருந்து புது தில்லிக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்றும், அவர்களில் 33 பேர் புது தில்லியில் இருந்து கோவைக்கும், 6 பேர் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கும் பணியும் நடைபெறவிருக்கிறது.புது தில்லியிலிருந்து 33 பேர் பயணிக்கும் விமானம் கோவை விமானம் 31ஆம் தேதி மாலை புறப்பட்டு, இரவு சென்றடையும். 6 பேர் பயணிக்கும் தில்லி - சென்னை விமானம் 31ஆம் தேதி மாலை புறப்பட்டு இரவு சென்னையை சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டிலிருந்து நேபாளம் சென்ற 103 பேரில் 21 பேர் பத்திரமாக நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினர். தற்போது மேலும் 39 தமிழர்கள் திபெத்தில் பாதுகாப்பாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஆனால், கும்பகோணம் மற்றும் சென்னையிலிருந்து ஏஜென்ஸி மூலம் நேபாளம் சென்றவர்களில் சென்னை மீண்ட 21 பேர் தவிர காணாமல் போனவர்களின் தகவல் இதுவரை தெரியவரவில்லை.அதேவேளையில், சாஹா எனும் பகுதியில் 148 இந்தியர்கள், 2 வெளிநாட்டவர் என 150 பேர் கொண்ட குழு சிக்கியதாகவும் தங்களை சீன ராணுவம் மீட்டதாக தேச மங்கையர்கரசி விடியோ வெளியிட்டிருந்தார். இவர்கள் தற்போது காத்மாண்டுவில் இருப்பதாகவும் தமிழக அமைச்சர்கள் குழு, வெளியுறவுத் துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் கூறியிருந்தார்.