இசை இளையராஜா..! கீர்த்தி சுரேஷின் டோரதி பட புதிய பாடல் வெளியீடு!

Wait 5 sec.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள “டோரதி” திரைப்படத்தின் புதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - நடிகை கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் “டோரதி”. மதுரையை மையமாகக் கொண்ட புதுமையான கதைகளத்துடன் கூடிய இப்படத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சர்வதேச திரைப்பட விழாக்களில் இடம்பெறும் தரத்தில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில், டோரதி படத்தின் “முத்துமணி” எனும் புதிய பாடல் இன்று (ஆக. 29) படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இளையராஜா எழுதி பாடியுள்ள முத்துமணி பாடல் விடியோவை பரத் முரளிதரண் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தின், கல்யாண விருந்து எனும் பாடல் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகி இணையம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குத்தாட்ட இசையுடன் பாடகர் அந்தோனி தாசன் பாடிய இப்பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.A new song from the movie "Dorothy," starring actress Keerthy Suresh, has been released.