வெள்ளப் பேரழிவு! உதவிகள் செய்ய சிறப்பு நிபந்தனைகள் பிறப்பித்த நேபாளம்!

Wait 5 sec.

நேபாளத்தில் புதன்கிழமை காலை நேரிட்ட பெரு வெள்ளத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உதவிகள் செய்ய பல்வேறு நாடுகள் முன்வந்திருக்கும் நிலையில் அதற்கு சில நிபந்தனைகளை நேபாள அரசு பிறப்பித்துள்ளது.வெள்ளம் பாதித்த பகுதிகளில் சனிக்கிழமையும் நான்காவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்கின்றன. சுமார் 3000 ராணுவத்தினர், 7450 பேர் கொண்ட மீட்புக் குழுக்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளன.நேபாள பெரு வெள்ளத்தில் இதுவரை 600 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 2000 பேர் காணவில்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற சித்வன் பகுதியில் 233 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் பிணவறைகளில் இடமில்லாத துயரம் ஏற்பட்டுள்ளது.வெளிநாடுகளிடமிருந்து, சிறப்பு சேவை மற்றும் தொழில்நுட்ப நிபுணர் குழுவினரின் உதவியைத்தான் நேபாளம் எதிர்பார்ப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.சுரங்கப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வது நேபாளத்துக்கு புதிது என்பதால் சுரங்கப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப உதவிகள் மற்றும் நிபுணர் குழுக்களை நேபாளம் வெளிநாடுகளிடம் கோருகிறது.பொதுவாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான தேவைகள் இல்லை என்றும், தங்களிடம் இருக்கும் பாதுகாப்புப் படையினரே அப்பணிகளை மேற்கொள்ள போதுமானவர்கள் என்றும் நேபாளம் தெரிவித்திருந்தது.ரசுவா மற்றும் நிவாகோட் பகுதிகளில் உள்ள ஹைட்ரோபவர் சுரங்கப் பாதைகளில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கியிருப்பார்கள் என அஞ்சப்படுவதால், அங்கு மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கான குழுவை இந்தியா அனுப்பி வைக்கிறது. Devastating floods! Nepal issues special conditions for providing aid!