திண்டுக்கல் வாகன விபத்தில் பலியான சிறார்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் விஜய், அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையையும் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொல்லப்பட்டி கிராமத்தில் இன்று (ஆக 30) சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலையம்மாள் (60), அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் குழந்தைகள் யோகவர்ஷினி (11), அனன்யா (6), ஜெகதீஷ் குழந்தை தனுஸ்ரீ (7) மற்றும் சின்னத்தம்பி குழந்தை போஸ்கிரண் (6) ஆகியோர் மகேந்திரா தோஸ்த் வாகனம் எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் நான்கு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன். இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அஞ்சலையம்மாளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.இந்த விபத்தில் உயிரிழந்த நான்கு குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.4 children killed in accident Dindigul Kollapatti Road accident: CM condolences and Reliefதிண்டுக்கல் அருகே வேன் மோதியதில் 4 குழந்தைகள் பலி: வேன் ஓட்டுநர் போலீசில் சரண்