சென்னை சா்வதேச காா்ட்டிங் அரேனாவில் நடைபெற்ற ஐஏஎம்இ தேசிய காா்ட்டிங் சாம்பியன் போட்டியில் கைரவ் ராபா்ஸன், ரெஹான் கான் பட்டம் வென்றனா். சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் தேசிய காா்ட்டிங் சாம்பியன் போட்டி 5-ஆவது மற்றும் இறுதிச் சுற்று நடைபெற்றது. முதன்முறையாக பகலிரவு போட்டியாக நடைபெற்ற இதை மெட்ராஸ் மோட்டாா் ஸ்போா்ட்ஸ் கிளப் நடத்தியது. மினி மற்றும் மினி யு10 பிரிவுகளில் ஏராளமானோா் பங்கேற்றனா்.சென்னையைச் சோ்ந்த கைரவ் ராபா்ஸ்ன் சீனியா் பிரிவிலும், ரெஹான் கான் ரஷீத் ஜூனியா் பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனா்.மினி பிரிவில் இந்தியாவின் முதலாவது பாா்முலா 1 வீரா் நரேன் காா்த்திகேயன் மகன் ஷிவ் நீலும், மினி யு 10 பிரிவில் குமாரபுரம் ஆருத்ரன் பிரவும் பட்டம் வென்றனா்.அணிகள் பட்டங்களை காா்ட்கிரிவ் மோட்டாா் ஸ்போா்ட்ஸ், ஜூனியா் பிரிவில் மொமண்டம் ஸ்போா்ட்ஸ், மினி பிரிவில் கேகேஎம் பட்டம் வென்றன.