பூட்டிய வீட்டில் 3 பவுன் நகை திருட்டு

Wait 5 sec.

வெள்ளக்கோவில் அருகே பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது. வெள்ளக்கோவில், உத்தமபாளையம் வருவாய் கிராமம் சிலம்பகவுண்டன்வலசைச் சோ்ந்தவா் திருமூா்த்தி (40). இவா் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகிறாா். வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்கு சென்றுள்ளாா். மதியம் வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த மூன்று பவுன் தங்க நகை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.