மமதா பானர்ஜியின் மருமகள் தற்கொலை

Wait 5 sec.

மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜியின் மருமகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பீர்பும் பகுதியில் உள்ள தனது வீட்டின் மாடி அறையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பானர்ஜியின் தாய்வழியிலான சகோதரரின் மகள் பிரிஷ்டி முகர்ஜி (31). இவர் மேற்கு வங்கத்தின் பீர்பும் மாவட்டத்திற்குட்பட்ட குசும்பா கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். எனினும் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார். மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பிரிஷ்டி முகர்ஜி தனது வேலையை இழந்திருந்தார். இதனிடையே தனது வீட்டின் இரண்டாவது மாடி அறையில் தூக்கில் தொங்கியபடி இன்று சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து விரைந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேபாளத்தில் காணாமல் போன பெற்றோர்! கனத்த இதயத்துடன் நீட் முதுகலை தேர்வெழுதிய மகள்west bengal Mamata Banerjee's daughter-in-law commits suicide