ஆர்செனல் கால்பந்தின் வரலாற்றில் கோல்கீப்பர் டேவிட் ராயாவின் புதிய சாதனை!

Wait 5 sec.

ஆர்செனல் கால்பந்து அணியின் கோல்கீப்பர் டேவிட் ராயா 50 க்ளீன் ஷீட்டுகளை (எதிரணிக்கு ஒரு கோல்கூட விடாமல் இருப்பது) பெற்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் ஆர்செனல் கால்பந்து அணிக்காக அதிவேகமாக 50 க்ளீன் ஷீட்டுகளைப் பெற்றவராக டேவிட் ராயா (30 வயது) சாதனை படைத்துள்ளார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கோல்கீப்பர் டேவிட் ராயா பிரீமியர் லீக்கில் ஆர்செனல் அணிக்காக 2023 முதல் விளையாடி வருகிறார்.கடந்த சீசனில் ஆர்செனல் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. நடப்பு சீசனிலும் முதலிரண்டு போட்டிகளில் வென்று இரண்டாமிடத்தில் இருக்கிறது. இதுவரை 109 ஆட்டங்களில் டேவிட் ராயா 50 க்ளீன் ஷீட்டுகளை பெற்றுள்ளார். பிரீமியர் லீக் வரலாற்றில் செல்ஸி அணியின் கோல்கீப்பர் பீட்டர் செக் 82 ஆட்டங்களில் 50 க்ளீன் ஷீட்டுகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். பிரீமியர் லீக் வரலாற்றில் அதிவேக 50 க்ளீன் ஷீட்டுகள் செல்ஸி அணி - பீட்டர் செக் (82) லிவர்பூல் அணி - பெபே ரெய்னா (92) மான்செஸ்டர் சிட்டி - எடர்சென் (106)மான்செஸ்டர் யுனைடெட் - பீட்டர் ஸ்மெய்சல் (108) ஆர்செனல் அணி - டேவிட் ராயா (109) 5️⃣0️⃣ clean sheets for David Raya And he's the fastest goalkeeper to reach a half-century in @Arsenal history ✨ pic.twitter.com/TZ0NHuwOm4— Premier League (@premierleague) August 31, 2026ஒரு பேரே வரலாறு... மெஸ்ஸியின் ஓய்வுக்கு ஐசிசி தலைவர் வாழ்த்து!David Raya is the fastest goalkeeper to reach 50 clean sheets (a half-century) in Arsenal history