ஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

Wait 5 sec.

உலகளாவிய அமைதியின்மைக்கு மத்தியில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.அமெரிக்கா - ஈரான் இடையே சுமார் 7 மாதங்களாக போர் நீடித்து வரும்நிலையில், உலகளவில் அமைதியின்மை நிலவி வருகிறது. இதனால், உலகளவில் வர்த்தமும் பாதிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், போர்களுக்கு மத்தியிலும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9 சதவிகிதமே இருந்தது.இருப்பினும், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் விவசாயத் துறையில் 4.4 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சி இருந்தநிலையில், தற்போது 3.6 சதவிகிதமாகக் குறைந்தது. இதேபோல், கடந்த நிதியாண்டில் 12.4 சதவிகிதமாக இருந்த சுரங்கத் துறையின் வளர்ச்சி, தற்போது 2.4 சதவிகிதத்துக்கு அதீத பின்னடைவு அடைந்தது.அதே வேளை தொழிற்துறையைப் பொருத்தவரையில், கடந்த நிதியாண்டில் 8.3 சதவிகிதமாக இருந்த உற்பத்தித் துறையானது, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.2 சதவிகிதமாக உயர்ந்தது. மின்சாரத் துறையில் 1.8 சதவிகிதத்திலிருந்து 8.9 சதவிகிதமாகவும், கட்டுமானத் துறையில் 5.2 சதவிகிதத்திலிருந்து 7.7 சதவிகிதமாகவும் வளர்ச்சியடைந்துள்ளது.போர்ப் பதற்றம்! ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!India's GDP expands 7.8% in Q1