மகளின் திருமணம்... விடியோ அழைப்பில் வாழ்த்திய பெற்றோர்!

Wait 5 sec.

அமெரிக்காவில் நடந்த மகளின் திருமணத்தை பெற்றோர்கள் விடியோ அழைப்பின் மூலம் கண்டு வாழ்த்தினர். விசா பிரச்னையால் அமெரிக்காவுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், தங்கள் ஒரே மகளின் திருமணத்தை விடியோ அழைப்பில் பெற்றோர்கள் கண்டு நெகிழ்ந்தனர். தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தின் வேபலசிங்காரம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜு - ஜோதி தம்பதியின் ஒரே மகள் ஹிமாபிந்து அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். அங்கு தெலங்கானாவைச் சேர்ந்த ரோஹித் என்பவருடன் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் அமெரிக்காவிலேயே திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனிடையே ஹிமாபிந்துவின் பெற்றோர் அமெரிக்காவுக்குச் செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. திருமண தேதி நெருங்கும் வேளையில் விசா வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் அமெரிக்காவுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழுமையாகச் செய்யப்பட்டிருந்ததால், வேறு வழியின்றி மகளின் திருமணத்தை விடியோ அழைப்பின் மூலம் பெற்றோர்கள் கண்டு வாழ்த்தினர். முழு திருமண நிகழ்வும் அமெரிக்காவில் இருந்து விடியோ அழைப்பு மூலம் தெலங்கானாவின் கிராமத்தில் இருந்த பெற்றோருக்கு தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டது. மணமகளின் பெற்றோருடன் கிராமத்தினரும் திருமணத்தை விடியோ அழைப்பிலேயே கண்டு வாழ்த்தினர். தங்கள் ஒரே மகளின் திருமணத்துக்குச் செல்ல முடியாத பெற்றோர் டிவியில் மகளின் திருமணத்தை கண்டு வாழ்த்தும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.நேபாள வெள்ளத்தில் 1,643 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய ஆசிரியர்!telangana parents watched their daughter's wedding in the United States via video call