சென்னையில் 11வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

Wait 5 sec.

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் கருப்புச் சட்டை அணிந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 நாள்களாகத் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இன்று கருப்புச் சட்டை அணிந்தும் கருப்புத் துணியை வாயில் கட்டிக்கொண்டும் 11வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தங்கள் சங்கத்திற்கு மாநகராட்சி வளாகத்தில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்கித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 நாள்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று 11 வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் கருப்பு உடை அணிந்து, வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.உழைப்போர் உரிமை இயக்கம் அமைப்பு சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தங்கள் சங்கத்துடன் அரசு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். தலித் சிறுமி தற்கொலை: கனிமொழி எம்.பி. கண்டனம்Sanitation workers protest enters 11th day; they are wearing black shirts