வடக்கு சைப்ரஸில் 270 பயணிகளுடன் சென்ற கப்பல், கடலுக்கு நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.கைரேனியா கடற்கரையில் துருக்கியின் தாசுசு துறைமுகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமையில் பயணிகள் கப்பல் புறப்பட்ட நிலையில், கடற்கரையிலிருந்து 4 கடல் மைல் தொலைவு சென்றபோது நீர் கசியத் தொடங்கி, கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.கப்பல் கவிழ்ந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மீட்புப் பணியில் கடலோரக் காவற்படையும் ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டது.மேலும், கப்பலில் பயணிகள், பணியாளர்கள் என 270 பேர் இருந்ததாகவும், அவர்களில் 6 பயணிகள் பலியானதாகவும், இதுவரையில் 159 பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், கைரேனியா துறைமுகத்தில் ஆம்புலன்ஸ் சேவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா - இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்: இஸ்லாமிய நாடுகளுக்கு கமேனி அழைப்புAt least six dead after boat carrying nearly 270 passengers, crew capsizes off northern Cyprus