இந்த வாரத்தில் தொடர்ந்து 3 ஆவது நாளாக இன்றும் (செப். 2) பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,471.32 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 635 புள்ளிகள் சரிந்து 76,309.28 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. காலையில் அதிகபட்சமாக சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை குறைந்தது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 224.95 புள்ளிகள் குறைந்து 23,830.85 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.98 சதவீதம் மற்றும் 0.56 சதவீதம் சரிந்துள்ளன. நிஃப்டி50 குறியீட்டில் இன்ஃபோசிஸ், ஈச்சர் மோட்டார்ஸ், ஶ்ரீராம் ஃபைனான்ஸ் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன.துறைவாரியாக, நிஃப்டி ஐடி 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்தது. நிஃப்டி ஆட்டோ, எஃப்எம்சிஜி ஆகியவையும் சரிந்தன. அதே சமயம், நிஃப்டி பார்மா, ஹெல்த்கேர் ஆகியவை சிறப்பாகச் செயல்பட்டன. சென்செக்ஸ் 30 நிறுவனங்களில் அதானி போர்ட்ஸ், சன் பார்மா மட்டும் உயர்வுடனும் மற்ற நிறுவனங்கள் அனைத்தும் சரிவுடனும் வர்த்தகமாகின்றன. அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் இந்திய பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. Stock Market: Sensex falls 600 pts; nifty below 24,000தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (செப். 2)