கிர்கிஸ்தானில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் ரஷியா மற்றும் சீன நாட்டு அதிபர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிலையில், மாநாட்டில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங்கையும் பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார். அதுமட்டுமின்றி, இந்தியாவில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள சீனாவுக்கு அழைப்பு விடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு சீன அதிபர் ஜின்பிங் நன்றி தெரிவித்தார். மேலும், பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகிப்பதற்கு ஆதரவும் தெரிவித்தார்.PM Modi, Chinese President Xi Jinping Shake Hands, Interact At SCO Summit In Bishkek