காவிரி டெல்டா பாசனத்துக்காக அணையின் வரலாற்றில், 93- ஆவது முறையாக மேட்டூர் அணையை தமிழக முதுல்வர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார்.மேட்டூர் அணையின் மதகுகளை திறந்து வைத்து, மலர் தூவியும், கையெடுத்து கும்பிடும் காவிரி தாயை வழிபட்டார் முதல்வர்.காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது பருவமழை பொய்த்து போனதால் திட்டமிட்டபடி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.இந்த நிலையில் கர்நாடக மற்றும் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கி தற்போது 90 அடியை எட்டியுள்ளது.டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீரை திறந்து விட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விவசாயிகளும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் மேட்டூர் அணை இன்று திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னையிலிருந்து சேலத்துக்கு விமானம் மூலம் வந்து அங்கு சாலை வழியாக மேட்டூர் அணைப் பகுதிக்கு வந்தடைந்தார்.மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன வசதிக்கு தண்ணீரைத் திறந்த வைத்தார். முன்னதாக மேட்டூர் அணைக்கு வந்த தமிழக முதலமைச்சருக்கு காவல்துறை சார்பிலும் மக்கள் சார்பிலும் கட்சி நிர்வாகிகள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று அவரை வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். மேட்டூர் அணை திறப்பின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி,கரூர் தஞ்சை, திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.அணை வரலாற்றில் செப்டம்பர் மாதத்தில் 4வது முறைடெல்டா பாசன நீர் திறப்பு உரிய நாளான ஜூன் 12-ம் தேதி 20 முறையும், ஜூன் மாதத்துக்கு முன்பாக 11 முறை திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் 93 ஆண்டு கால வரலாற்றில், காலதாமதமாக 62-வது முறையாக இன்று பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் பங்கேற்ற விழாவிற்காக 3800-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தின் மேட்டூர் பகுதி காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. This is the fourth time in the history of the Mettur Dam that it is being opened in September!