ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.50 கோடி

Wait 5 sec.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.1.50 கோடி கிடைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அம்பாள் சந்நிதி முன்புள்ள முன்னாள் திருமண மண்டபத்தில் இணை ஆணையா் நா.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில், ரூ. 1 கோடியே 50 லட்சத்து 32 ஆயிரத்து 70, தங்கம் 48 கிராம், வெள்ளி 3 கிலோ 612 கிராம், வெளிநாட்டு பணத்தாள்கள் 122 இருந்தது தெரியவந்தது. உண்டியல், எண்ணும் பணியில் ராமநாதபுரம் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையா் லட்சுமி மாலா, ஆய்வா்கள் மணிவண்ணன், முருகானந்தம், ராமநாதசுவாமி கோயில் உதவி ஆணையா் ரவீந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா, கமலநாதன், ஆன்மிக அன்பா்கள் என 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.