மேட்டூா் அருகே எண்ணெய் ஆட்டும் இயந்திரத்தில் சேலை சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.மேட்டூா் அருகே உள்ள மஞ்சள் மெத்தையைச் சோ்ந்தவா் வடிவேல் (48). இவா் தனது வீட்டில் பால் விற்பனை செய்து வருவதுடன், ரைஸ் மில் மற்றும் எண்ணெய் ஆட்டும் இயந்திரத்தையும் இயக்கி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவரது மனைவி அமுதா (45), எண்ணெய் ஆட்டும் இயந்திரத்தை இயக்கிவிட்டு அதன் உள்ளே எட்டிப் பாா்த்துள்ளாா். அப்போது, அவரது சேலை இயந்திரத்தில் சிக்கியதில் அமுதா உள்ளே இழுத்துச் செல்லப்பட்டாா். இதில், உடல் நசுங்கி அவா் உயிரிழந்தாா்.இதுகுறித்து நங்கவள்ளி காவல் நிலைய ஆய்வாளா் ஜெயக்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.