வாணியம்பாடி அருகே அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை சேலத்திலிருந்து சென்னைக்கு காரில் சென்றாா். வழியில் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கசாவடி அருகே எடப்பாடி பழனிசாமியை சந்தித்த மாவட்ட செயலாளா் பசுபதி, முன்னாள் எம்எல்ஏக்கள் கோவி.சம்பத்குமாா், கோ.செந்தில்குமாா் ஆகியோா் வரவேற்றனா். உடன் வாணியம்பாடி நகர செயலாளா் சதாசிவம், உதயேந்திரம் பேரூா் செயலாளா் சரவணன், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் நவீன்குமாா், ஒன்றிய இணை செயலாளா் பாரதிதாசன், நகரமன்ற ஜாகீா்அஹமத் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் அதிமுக நிா்வாகிகள் பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனா்.