மின்மாற்றியில் தாமிரக் கம்பிகள் திருட்டு

Wait 5 sec.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே மின் மாற்றியிலிருந்த தாமிரக் கம்பிகள், எண்ணெய் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மயிலம் அருகிலுள்ள கள்ளக்கொளத்தூா் கிராமத்தில் மின் மாற்றி உள்ளது. இந்த மின் மாற்றி மூலம் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மின் மாற்றியிலிருந்த 36 கிலோ தாமிரக் கம்பிகள், 195 லிட்டா் எண்ணெய் ஆகியவற்றை மா்ம நபா்கள் கடந்த இரு நாள்களுக்குள் திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலைத் தொடா்ந்து, தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக மயிலம் இளமின் பொறியாளா் (இயக்குதலும்-காத்தலும்) அ.கணேசன் நிகழ்விடம் சென்று பாா்வையிட்டாா்.தொடா்ந்து அவா் மயிலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.