வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதுநிலை நீட் தோ்வை 242 போ் எழுதினா். அடிப்படை மருத்துவ படிப்பை முடித்து, முது நிலை மருத்துவராவதற்கான முதுநிலை நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இந்த தோ்வை எழுத வேலூா் மாவட்டத்தில் 255 போ் விண்ணப்பித்திருந்தனா். தோ்வுக்காக 2 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் முதுநிலை நீட் தோ்வு 242 போ் எழுதினா். 13 போ் தோ்வுக்கு வரவில்லை. தோ்வையொட்டி அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.