ஆப்கனுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு.. டி20 தொடரில் மீண்டும் ஜஸ்ப்ரீத் பும்ரா, சஞ்சு சாம்சன்!

Wait 5 sec.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிதான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடர் வருகிற செப். 13 ஆம் தேதி தொடங்குகிறது. மூன்று போட்டிகளும் தில்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் திடலில் நடைபெறுகின்றன.ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகள் அனைத்தும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக துபை போன்ற பொதுவான கிரிக்கெட் திடல்களிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. ஆப்கன் - இந்தியா மோதும் போட்டிகள் இந்தியாவிலேயே நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் போட்டியை நடத்தும் நாடாகவும், இந்திய அணியினர் வெளிநாட்டு அணியாகவும் களமிறங்குகின்றனர்.இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, தொடக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சன் இருவரும் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும், திலக் வர்மா துணை கேப்டனாகவும் தொடர்கின்றனர். காயத்தால் அவதிப்பட்டு வந்த ஹார்திக் பாண்டியா, இந்திய அணியில் இடம்பெறவில்லை.India’s squad for Afghanistan T20I series announced. #TeamIndia will play three T20Is against Afghanistan at New Delhi, beginning September 13.#AFGvIND pic.twitter.com/UqTUeZyHz8— BCCI (@BCCI) September 1, 2026ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய டி20 அணி: ஷ்ரேயாஸ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்ஷி, சஞ்சு சாம்சன், கிஷன், திலக் வர்மா, ஷிவம் துபே, நிதீஷ்குமார் ரெட்டி, அக்‌ஷர், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா.The BCCI on Tuesday announced the Indian squad to face Afghanistan in a 3-match T20I series. Nitish Reddy, Washington Sundar, Jasprit Bumrah and Harshit Rana were all announced for the series but their inclusion in the matches is subject to fitness clearance.