இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் நடப்பு சீசனில் ஆர்செனல் அணி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நடப்பு சாம்பியனான ஆர்செனல் அணி இந்த சீசனிலும் தொடர்ச்சியான இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது. இருப்பினும் மான்செஸ்டர் சிட்டி அணி முதலிடத்தில் இருக்கிறது.ஆர்செனல் அணியும் ஆஸ்டன் வில்லா அணியும் இன்று மோதின. இந்தப் போட்டியில் ஆர்செனல் அணி 1-0 என த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆர்செனல் அணியின் நட்சத்திர வீரர் புகாயோ சாகா 59ஆவது நிமிஷத்தில் அசத்தலான கோல் அடித்தார். கோல் அடித்ததும் ஆக்ரோஷமாக கொண்டாடினார். இந்தப் போட்டியில் 61 சதவிகித நேரம் ஆர்செனல் அணி பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இந்த அணியினர் 518 பாஸ்களில் 90 சதவிகித துல்லியத்துடன் பாஸ் செய்தார்கள். ஆஸ்டன் வில்லா அணி அடித்த 7 ஷாட்டுகளில் இலக்கை நோக்கி ஒருமுறைக்கூட அடிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆர்செனல் அணி ஏழு ஷாட்டுகளில் இரண்டு முறை இலக்கை நோக்கி அடித்தார்கள்.Everything about this goal pic.twitter.com/tXX6DsMrUk— Arsenal (@Arsenal) September 1, 2026ஒரு பேரே வரலாறு... மெஸ்ஸியின் ஓய்வுக்கு ஐசிசி தலைவர் வாழ்த்து!Aston Villa 0-1 Arsenal: Bukayo Saka earns win for the Gunners as they begin title defence with back-to-back victories