ஆகஸ்ட் மாத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ. 1.99 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.8% அதிகமாகும். எனினும் கடந்த மாத ஜிஎஸ்டி வருவாய் உடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவாகும். கடந்த ஜூலையில் 2.11 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டிருந்தது.மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மொத்த வரி வசூலில் உள்நாட்டு வருவாய் பங்களிப்பு 1.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் உடன் ஒப்பிடுகையில் 9.3% சரிவாகும். மொத்த இறக்குமதி வருவாய் 29% அதிகரித்து ரூ. 62,604 கோடியாக உள்ளது. மத்திய ஜிஎஸ்டி வருவாய் ரூ. 38,413 கோடி, மாநில ஜிஎஸ்டி வருவாய் ரூ. 46,316 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.15 லட்சம் கோடியாக உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் ரூ. 17,789 கோடி, இதற்கு அடுத்தபடியாக ரூ. 8,608 கோடி. குஜராத் ரூ. 8,312, உத்தரப் பிரதேசம் ரூ. 7,973 கோடி, தமிழ்நாடு ரூ. 7,288 கோடி, ஹரியாணா ரூ. 4,982 கோடி, தெலங்கானா ரூ. 4,448 கோடி, மேற்கு வங்கம் ரூ. 3,975 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக லட்சத்தீவில் ரூ. 10 கோடி, அந்தமான் நிக்கோபர் தீவுகள் ரூ. 53 கோடி, மணிப்பூர் ரூ. 56 கோடி, மிசோரம் ரூ. 78 கோடி, சிக்கிம் ரூ. 81 கோடி, லடாக்கில் ரூ. 85 கோடி வசூலானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிக ஊதியம் பெறும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பட்டியல்! முதலிடத்தில் யார்?GST collection rose by nearly 15% to Rs 1.99 lakh crore in August finance ministry