சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அன்னம் தொடர் 500 நாள்களை நிறைவு செய்துள்ளது. இதனால் அத்தொடரின் குழுவினருக்கு ரசிகர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு அன்னம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 2024 டிசம்பர் 2 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிவரும் இத்தொடர் பிரைம் டைம் எனப்படும் முக்கியமான நேரத்தில் ஒளிபரப்பப்படுவதால், ஏராளமான ரசிகர்கள் இத்தொடருக்கு உள்ளனர். இத்தொடரில் அயலி இணையத் தொடரில் நடித்து புகழ் பெற்ற அபி நட்சத்திரா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் -2 தொடரில் நாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பரத்குமார் நடிக்கிறார்.பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுக்கப்பட்டு வரும் இத்தொடரில், மனோகர், கார்த்திக், ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இயக்குநர் என். சுந்தரேஷ்வரன் இத்தொடரை இயக்குகிறார். தற்போது அன்னம் தொடர் 500 நாள்களை நிறைவு செய்துள்ளது. இதற்கான குழு புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.500 நாள்களை நிறைவு செய்த அய்யனார் துணை தொடர்! View this post on Instagram Fans Praise pours for Actress Abi Nakshatras Annam serial in sun TV