துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நார்த் ஸோன் அணியை வீழ்த்தி சௌத் ஸோன் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நார்த் ஸோன் மற்றும் சௌத் ஸோன் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் திலக் வர்மா தலைமையிலான சௌத் ஸோன் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நார்த் ஸோன் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய சௌத் ஸோன் அணி, 43.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்திய சௌத் ஸோன் அணியின் கேப்டன் திலக் வர்மா இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 79 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.அவரைத் தொடர்ந்து, நாராயண் ஜெகதீசன் 43 ரன்கள், ரிக்கி 42 ரன்கள் மற்றும் சமரன் ரவிச்சந்திரன் 32* ரன்கள் எடுத்தனர்.நார்த் ஸோன் தரப்பில் அபித் முஸ்டக் இரண்டு விக்கெட்டுகளையும், குர்னூர் பிரார் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் திலக் வர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.சௌத் ஸோன் மற்றும் ஈஸ்ட் ஸோன் இடையேயான இறுதிப்போட்டி வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் திடலில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.South Zone advanced to the final of the Duleep Trophy cricket tournament by defeating North Zone in the second semi-final match.ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தேவ்தத் படிக்கல் முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஷுப்மன் கில்!