சர்தார் 2 படத்தின் டிரைலர் திங்கள்கிழமை (ஆக. 31) வெளியானது.இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.இதையடுத்து, மீண்டும் இந்திய உளவாளி பற்றிய கதையாக எழுதப்பட்டுள்ள சர்தார் 2 படத்தில், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.இந்தப் படத்தில் நடிகர்கள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகிபாபு மற்றும் ரஜீஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த நிலையில், சர்தார் 2 படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. நடிகர்கள் சூர்யா, கவின் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.மேலும், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.யுவன் இசையில் பிரபு நடிக்கும் புதிய படம்! படப்பிடிப்பு தொடக்கம்!The trailer for the movie Sardar 2 was released on Monday (Aug. 31).