டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளில் முன்னணியில் உள்ள போன்பேசி, விரைவில் போன்பே 123பே என்ற புதிய வசதியை ஏற்படுத்தவிருப்பதாகவும் பயனர்கள் இனி இணைய வசதி இல்லாமலேயே பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.நாட்டில் முதல் முறையாக, பணப்பரிவர்த்தனைக்கான செயலி நிறுவனம் ஒன்று இந்த சேவையை அறிமுகப்படுத்துகிறது.குறைந்த அளவிலான 2G இணைப்பு வசதி கொண்ட பகுதிகளிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடப்பதை உறுதி செய்யும் வகையிலும், தனித்துவ தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் குறுஞ்செய்தி அடிப்படையிலான தொழில்நுட்பத்திலும் இது செயல்படவிருக்கிறது.இதற்காக நோக்கியா, எச்எம்டி, லாவா உள்ளிட்ட பல்வேறு செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் போன்பே ஒருங்கிணைந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.முதல்முறை இந்த சேவையை ஆக்டிவ் செய்ய குரல் மூலம் உதவி செய்தால், செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உதவி எண்கள் போன்றவற்றையும் உருவாக்கவிருக்கிறது.இதில் இந்திய மொழிகளில் 12 மொழிகளில் மக்களுக்கு இதனை எப்படி ஆக்டிச் செய்ய வேண்டும் என்று படிப்படியாக விளக்கும். ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களும் இந்த சேவையை பெறும் வகையில் விரிவுபடுத்தவிருக்கிறது. Money transfers without internet access! New feature on PhonePe.