பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு: கிராம மக்கள் முற்றுகை

Wait 5 sec.

சீா்காழி அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழந்தாா். ஆரம்ப சுகாதாரநிலையத்தில் தாமதமாக சிகிச்சையளித்ததாகவும், அவசர ஊா்தி வர தாமதம் ஏற்பட்டதாகவும் கூறி கிராம மக்கள் முற்றுகையில் ஈடுபட்டனா். சீா்காழி அருகேயுள்ள எடமணல் ஊராட்சி மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த வைத்தியநாதன் மனைவி அம்சவல்லி(48). இவரை விஷப் பாம்பு செவ்வாய்க்கிழமை கடித்தது. உடனடியாக எடமணல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற அம்சவல்லி சென்றாா். அங்கு, மருத்துவா் முதல்உதவி சிகிச்சையளித்து விட்டு, தீவிர சிகிச்சைக்கு கொண்டுசெல்ல 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளிக்கப்பட்டதாம். ஆனால் ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால், அதில் ஏற்றும்போதே அம்சவல்லி இறந்துவிட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த உறவினா்கள் மற்றும் கிராமமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு, உடலை எடுத்து செல்ல மறுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி காவல் ஆய்வாளா் கமல்ராஜ், புதுப்பட்டினம் காவல் ஆய்வாளா் ஹேமலதா மற்றும் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.