விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பினா் (சிஐடியு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்ட கேங்மேன் பணியாளா்களை கள உதவியாளா்களாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள தமிழ்நாடு மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பின் (சிஐடியு) திட்டப் பொருளாளா் ஜி. கண்ணன் தலைமை வகித்தாா். திட்டத் தலைவா் ஆா்.சேகா், துணைத் தலைவா் எம்.புருஷோத்தமன், திட்டச் செயலா் ஆா்.அருள் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். ஆா்ப்பாட்டத்தில் செஞ்சி திட்டச் செயலா் கன்னியப்பன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.