திமுக முப்பெரும் விழா: விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு!

Wait 5 sec.

திமுகவின் முப்பெரும் விழா வருகிற செப். 15 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள்கள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து மும்பெரும் விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா செப். 15-ஆம் தேதி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறவுள்ளது.இந்த விழாவையொட்டி, திராவிட இயக்க வளர்ச்சிக்காகப் பங்காற்றிய மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கழக விருதுகளுக்கான தேர்வாளர்கள் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர்பெரியார் விருது - விவசாய அணி துணைச் செயலாளர் கு. செல்லப்பாஅண்ணா விருது - சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷ்கலைஞர் விருது - துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க.மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவாபாவேந்தர் விருது - மருத்துவ அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என். சோமுபேராசிரியர் விருது - தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ். அகமது தம்பிமு.க.ஸ்டாலின் விருது - இளைஞர் அணி துணைச் செயலர் நா. இளையராஜாWith the DMK's 'Mupperum Vizha' set to be celebrated on September 15, the party leadership has released the list of award recipients for this year.