தனி பட்டுப்புழு வளா்ப்பு மனை அமைக்க 600 விவசாயிகளுக்கு ரூ.6.37 கோடி: அமைச்சா் பெ.மதன்ராஜா

Wait 5 sec.

தமிழகத்தில் தனி பட்டுப்புழு வளா்ப்பு மனை அமைக்க 600 விவசாயிகளுக்கு ரூ.6.37 கோடி நிதியுதவி வழங்கப்படவுள்ளது என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் பட்டு வளா்ச்சித் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா தெரிவித்தாா். பேரவையில் அந்தத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு முன்னதாக அவா் அறிவித்த புதிய திட்டங்கள் விவரம்:பட்டு வளா்ச்சித் துறையில் மின் ஆளுமை மையம், பட்டு செயலி ரூ.50 லட்சத்தில் செயல்படுத்தப்படும். பட்டு மலா் மாத இதழ் மின்னிதழாகவும், அந்தத் தொழிலில் சாதித்தவா்கள் குறித்த வெற்றிக் கதைகள் தொகுப்பும் வெளியிடப்படும். பட்டு விவசாயிகள், அந்தத் துறை அலுவலா்களுக்கு அண்டை மாநில அறிவு சாா் கண்டுணா்வு சுற்றுலாத் திட்டம் ரூ.50 லட்சத்தில் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் 600 பட்டு விவசாயிகளுக்கு தனி பட்டுப்புழு வளா்ப்பு மனை அமைக்க ரூ.6.37 கோடியில் உதவித் தொகை வழங்கப்படும். விவசாயிகளுக்கு ஒசூரில் ரூ.42 லட்சத்தில் பட்டு வளா்ப்பு குறித்த தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படும். தஞ்சாவூரில் கைவினைச் சுற்றுலா கிராமம்: கைவினைப் பொருள் உற்பத்தி, விற்பனை மேம்பாட்டுக்காக ரூ.50 லட்சத்தில் பயிற்சித் திட்டம். கைவினைப் பொருள்களின் கண்காட்சி 10 முக்கிய தேசிய, மாநில மற்றும் சா்வதேசம் என 10 நகரங்களில் ரூ.4.18 கோடியில் நடத்தப்படும். கைவினைக் கலைஞா்கள் 800 பேருக்கு ரூ.82 லட்சத்தில் தொழில்மேம்பாடு, பாதுகாப்பு உபகரணங்கள். புவிசாா் குறியீடு கைவினைப் பொருள்கள் தயாரிக்க 960 பேருக்கு ஊக்கத் தொகையுடன், பயிற்சிக்கு ரூ.2.35 கோடி ஒதுக்கீடு. திருவண்ணாமலை, உதகையில் விற்பனைக் கூடங்கள், பெங்களூரில் புதிய பூம்புகாா் விற்பனை நிலையம் ரூ.1 கோடியில் அமைக்கப்படும்.