12 ராசிக்கான ராசிப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.ஆகஸ்ட் 31, 2026 (திங்கள் கிழமை) மேஷம்:இன்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிபவர்களின் விருப்பமும் நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5ரிஷபம்:இன்று புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறமுடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டாகும். தெய்வ வழிபாடுகளுக்காக பயணங்கள் அமையும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9மிதுனம்:இன்று குடும்ப வாழ்வில் இருந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். திருமண வயதை அடைந்த மங்கையருக்கு திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7கடகம்:இன்று பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் கடந்தகால கடன்கள் யாவும் விலகி கண்ணியமிக்க வாழ்க்கை அமையும். செல்வம், செல்வாக்கு, உயரும் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9சிம்மம்:இன்று உங்களின் செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய நேரம். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கௌரவமிக்க மாண்புமிகு பதவிகள் கிடைக்கும். மக்களின் ஆதரவுகள் அதிகரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9கன்னி:இன்று முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றமுடியும். வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும்அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9துலாம்:இன்று சில புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத்தட்டும். தடைப்பட்ட பணவரவுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகி உடனிருக்கும் பணியாட்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அமையும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7விருச்சிகம்:இன்று தொழிலில் இருந்துவந்த மந்தநிலைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களின் உதவியும் தக்கசமயத்தில் அமையும். அரசுவழியில் உதவிகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5தனுசு:இன்று மனைவி, பிள்ளைகளால் மனதில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சிறப்பாக அமையும். புதிய வீடுகட்டி குடிபுகும் யோகமும் வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மறக்கமுடியாத சம்பவங்கள் நடைபெறும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9மகரம்:இன்று தடைப்பட்ட சுபகாரியங்கள் யாவும் தடபுடலாக நடைபெற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெறும். கூட்டுத்தொழிலிலும் நல்ல லாபம் அமையும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9கும்பம்:இன்று கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி, பொறாமைகள் மறைந்து எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்களின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7மீனம்:இன்று உங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். பூர்வீக சொத்துகளாலும் சாதகமான பலனைப் பெறமுடியும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5Today Rasi Palan in Tamil - 31 August 2026 | இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 31 2026 | Today Horoscope in Tamil