தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் சாலை விரிவாக்கம் குறித்து விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரித்து வெளியிடப்படும் என பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று வினாக்கள் மற்றும் விடைகள் நேரத்தின் போது பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அந்தந்தத் துறை அமைச்சர்கள் பதிலளித்துப் பேசினர்.இன்று காலை சாலை விரிவாக்கப் பணிகள் குறித்த கேள்விக்கு ஆதவ் அர்ஜுனா அளித்த பதிலில், தமிழ்நாட்டில் இன்னமும் பல இடங்களில் இரு வழி மற்றும் ஒருவழிச் சாலைகள் உள்ளன.தேசிய நெடுஞ்சாலையுடன் ஊரகச் சாலைகள் இணையும் இடத்தில்தான் அதிக விபத்துகள் நேரிடுகின்றன என்றும் கூறினார்.மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளவிருக்கும் சாலைப் பணிகள் குறித்தும் ஆதவ் அர்ஜுனா கூறினார்.வினாக்கள் மற்றும் விடைகள் நேரத்தின்போது பேசிய அவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன், மூலக் கேள்விகளுக்குத் தொடர்புடைய கேள்விகளை உறுப்பினர்கள் எழுப்பினால் நல்லது. தொடர்பில்லாத கேள்விகளை எழுப்பினால் அமைச்சர்கள் எவ்வாறு பதிலளிப்பது. இதனால், அவையில் எழும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பதில்லை என்பது போன்ற தவறான கருத்து பரவுகிறது.எனவே, மூலக் கேள்விகளுக்குத் தொடர்புடைய கேள்விகளை கேட்குமாறு உறுப்பினர்களுக்கு அவைத் தலைவர் அறிவுறுத்தினார். Road expansion Detailed project report soon Aadav Arjuna