தில்லி புறப்பட்ட இண்டிகோ விமானம், என்ஜின் கோளாறு காரணமாக சில நிமிடங்களிலேயே மீண்டும் கோவாவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.கோவா மனோகர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 9.16 மணியளவில் இண்டிகோவின் 6E 2102 என்ற விமானம் புறப்பட்டுச் சென்றது.சுமார் 229 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம், நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை கவனித்த விமானிகள், மீண்டும் கோவாவில் அவசர தரையிறக்கத்துக்கு காலை 9.25 மணியளவில் அனுமதி கோரினர்.இதனைத் தொடர்ந்து கோவா விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட நிலையில், காலை 9.50 மணியளவில் இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், விமானத்தை சோதனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.விமானத்தில் எழுந்த தொழில்நுட்பக் கோளாறு ஆய்வு செய்யப்பட்டு, முழு சோதனைக்குப் பிறகு மீண்டும் விமானம் புறப்படும் என்றும், பயணிகளின் சிரமத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனிடையே, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தொடர்பாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை விசாரணை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Engine trouble! IndiGo flight makes emergency landing!மெரீனாவில் காமராஜருக்கு இடம் மறுக்கப்பட்டதா? பேரவையில் தங்கம் தென்னரசு விளக்கம்!