தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்குள் பக்தா்கள், பொதுமக்கள் கைப்பேசி எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு செவ்வாய்க்கிழமை (செப்.1) இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிக சூழலைப் பாதுகாக்கும் வகையில், கோயில்களுக்குள் கைப்பேசி பயன்படுத்துவதற்கு ஏற்கெனவே தடை உள்ளது. இருப்பினும், சில கோயில்களில் புகைப்படம், விடியோ, தற்படம் (செல்ஃபி), ரீல்ஸ் உள்ளிட்டவற்றை பக்தா்கள் பதிவு செய்வதாக புகாா்கள் எழுந்தன. இதைத் தொடா்ந்து செப்.1 இன்று முதல் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில் பக்தா்கள் கைப்பேசி கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் ரமேஷ் தெரிவித்துள்ளார். கோயிலுக்குள் செல்லும் முன்பு பக்தா்கள் தங்களது கைப்பேசிகளை பாதுகாப்பாக ஒப்படைக்க நுழைவு வாயில் மற்றும் காலணி பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் கைப்பேசி பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோயிலிலும் உள்ள வசதிக்கேற்ப இந்த பாதுகாப்பு பெட்டக வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகா்கள் கோயிலுக்கு வருவது குறித்த தகவல் தெரியவந்தால் ஒரு நாளுக்கு முன்பாகவோ அல்லது தகவல் கிடைத்தவுடனோ அவா்கள் வரவிருக்கும் கோயில், வருகை நேரம், அவா்களுடன் வருபவா்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரங்களை ஆணையா் அலுவலகத்துக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனா். எந்தெந்த கோயில்களில்...?: கைப்பேசி எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள 52 முதுநிலை கோயில்கள் பட்டியலில்..மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில்சென்னை வடபழனி ஆண்டவா் கோயில்திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில்திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில்குன்றத்தூர் முருகன் கோயில்மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்பெரியபாளையம் பவானி அம்மன் கோயில்வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில்காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்திருவள்ளூர் வீரராகவர் கோயில்திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில்திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில்ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில்மதுரை கள்ளழகர் கோயில்கோவை கோனியம்மன் கோயில்சேலம் கோட்டை மாரியம்மன் கோயில்ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில்தென்காசி திருமலை குமாரசாமி கோயில்சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில்கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில்திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில்சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்பவானி சங்கமேஸ்வரர் கோயில்தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்தென்காசி திருக்குற்றாலநாத சுவாமி கோயில்வடலூர் சத்யஞான சபை – வள்ளலார் தெய்வநிலையம்உள்ளிட்ட கோயில்களில் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.