நடிகை கயாடு லோஹர் தர்மன் திரைப்படத்தில் சிறப்பு நடனமாட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 திரைப்படத்திற்குத் தர்மன் எனப் பெயரிட்டுள்ளனர். ஆக்ஷன் கலந்த கதையாக உருவாகிவரும் இப்படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார். இது, படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு கலவையாக இருக்கும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.தற்போது, இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிரது. மேலும், இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், நடிகை கயாடு லோஹர் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து சிறப்பு நடனமாட உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, நடிகை ஷ்ரேயா சரண் தர்மன் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இது, சிறப்பு நடனத்திற்குதான் எனத் தகவல் பரவியது. தற்போது, கயாடு லோஹரும் ரஜினியுடன் இணைய உள்ள தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாள்களுக்கு முன் விமானத்தில் ரஜினியின் அருகே அமர்ந்து பயணித்த கயாடு, ‘விரைவில் நான் ரஜினி சாருடன் இணைந்து நடிப்பேன் என நம்புகிறேன்’ எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ரஷ்மிகா மந்தனாவின் மைசா வெளியீட்டுத் தேதி!actress Kayadu Lohar will perform a special dance number in the movie Dharman.