விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது இது முதல்முறையல்ல, திமுக ஆட்சியில் 5,000-க்கும் அதிகமான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஜோசப் விஜய் இன்று வெளியிட்ட நிலையில், திமுக ஆட்சி காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்வதாக அறிவித்தார்.இந்த அறிவிப்பு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என்று ஒரு அமைச்சர் பேசியிருந்தார். அது சரியான தகவல் அல்ல.முந்தைய ஆட்சியில், குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்கள், 8 வழிச் சாலை திட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்டவைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட வழக்குகளை முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் ரத்து செய்தார்.அப்போது 110 விதியின் கீழ் ரத்து செய்யப்படவில்லை. அதிகாரிகளை அழைத்து உத்தரவிட்ட பிறகு, சட்டப்பேரவையில் தெரிவித்தார்” எனக் குறிப்பிட்டார்.மேலும், முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து பேசிய வேளாண் அமைச்சர், விவசாயிகள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டதாக குறிப்பிட்டார். அதனை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.அந்த கோரிக்கையை ஏற்ற பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், பொய் வழக்கு என்ற வார்த்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும் எனத் தெரிவித்தார்.This is not the first time cases against farmers are being withdrawn! Udhayanidhi lists the instances.திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்