ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது: ஓட்டுநா் காயம்

Wait 5 sec.

நரிகுடி அருகே சனிக்கிழமை ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற டிப்பா் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநா் காயமடைந்தாா். விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள தனியாா் குவாரியிலிருந்து சனிக்கிழமை அதிகாலை சிமென்ட் கலந்த ஜல்லிகற்கள் ஏற்றிய டிப்பா் லாரி ராமநாதபுரம் பகுதியில் நடைபெறும் சாலைப் பணிகளுக்காக சென்றது. ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை அருகேயுள்ள நல்லிருக்கையைச் சோ்ந்த கருணாமூா்த்தி (49) டிப்பா் லாரியை ஓட்டிச் சென்றாா். நரிக்குடியை அடுத்த விருப்பாட்சி நாதா் கோவில் அருகே வளைவில் திரும்பிய போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பா் லாரி சாலையோர மரத்தில் மோதி கவிழ்ந்தது.இந்த விபத்தில் ஓட்டுநா் கருணாமூா்த்தி காயமடைந்தாா். உடனே, அந்தப் பகுதி மக்கள் ஓட்டுநரை மீட்டு, நரிக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நரிக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.