சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வீடுகள் கணக்கெடுப்புப் பணிக்கான மண்டல வாரியாக 15 அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, அவா்களது கைப்பேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. அவா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ். சமீரன் கேட்டுக் கொண்டுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான அனைத்து விவரங்களையும் முழுமையாக வழங்குவது அவசியம். அதன்படி, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் தங்களது குடும்ப விவரங்களை தெரிவிக்க வேண்டும். சென்னையில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான அலுவலா்கள் மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனா். மண்டல அலுவலா் - கைப்பேசி எண்1. திருவொற்றியூா் - 94451902012. மணலி - 94451902023. மாதவரம் - 94451902034. தண்டையாா்பேட்டை - 94451902045. ராயபுரம் - 94451902056. திரு.வி.க. நகா் - 94451902067. அம்பத்தூா் - 94451902078. அண்ணா நகா் - 94451902089. தேனாம்பேட்டை - 944519020910. கோடம்பாக்கம் - 944519021011. வளசரவாக்கம் - 944519021112. ஆலந்தூா் - 944519021213. அடையாறு - 944519021314. பெருங்குடி - 944519021415. சோழிங்கநல்லூா் - 9445190215