மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு

Wait 5 sec.

பெரம்பலூா் அருகே மின் வீட்டு இணைப்பை பழுது நீக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் மீது செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிகாடு தெற்கு தெருவைச் சோ்ந்தவா் முகமது இக்பால் மகன் முகமது அஷ்ரப் (32). இவா், கடந்த 5 ஆண்டுகளாக லப்பைக்குடிகாடு துணை மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், லப்பைக்குடிகாடு ஜமாலியா நகரைச் சோ்ந்த கமால் பாட்ஷா தனது வீட்டில் கடந்த 2 நாள்களாக மின்சாரம் இல்லை என அளித்த புகாரின்பேரில் ஜமாலியா நகரில் உள்ள மின் மாற்றியை செவ்வாய்க்கிழமை தவறாக நிறுத்திய முகமது அஷ்ரப், அங்குள்ள மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் அவரின் உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.