மேற்கு ஆசியா பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!

Wait 5 sec.

மும்பை: மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் மோதல்களால் உலகளாவிய பங்குகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து, பங்குச் சந்தை 3வது நாளாக 374 புள்ளிகள் சரிந்து நிறைவடைந்தன.இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 808.56 புள்ளிகள் சரிந்து 76,135.72 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 373.93 புள்ளிகள் சரிந்து 76,570.35 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 141.35 புள்ளிகள் சரிந்து, 23,914.45 புள்ளிகளாக நிலைபெற்றது.சென்செக்ஸில் ஏசியன் பெயிண்ட்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, எச்.சி.எல் டெக், பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்த நிலையில் மறுபுறம் அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிட், என்.டி.பி.சி மற்றும் டைட்டன் ஆகிய பங்குகள் உயர்ந்தன.அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்து, எரிசக்தி விநியோகம் குறித்த கவலைகள் மீண்டும் எழுந்ததால், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்ற நம்பிக்கை தகர்ந்ததாலும், உலகளாவிய விற்பனை தொடர்ந்து, இந்தியப் பங்குச் சந்தைகள் 3வது நாளாக இன்றும் சரிந்தன.உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய பத்திர வருவாயை உள்ளிட்டவையைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையை விட்டு சற்று விலகி இருப்பதாக வர்த்தர்கள் தெரிவித்தனர்.தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 1,143.38 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி 3.99 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 225 குறியீடு 2.85 சதவீதமும், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடும் சரிவுடன் நிறைவடைந்தன.ஐரோப்பிய சந்தை சரிவுடன் வர்த்தகமான நிலையில், அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் நிறைவடைந்தன.உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.40 சதவீதம் உயர்ந்து 95.13 அமெரிக்க டாலராக உள்ளது.Stock markets declined for the third consecutive day on Wednesday.இந்தியாவின் பொருளாதாரம் 7.8% வளா்ச்சி