கிருஷ்ணதேவராயராக நடிக்கும் கிச்சா சுதீப்!

Wait 5 sec.

நடிகர் கிச்சா சுதீப் நாயகனாக நடிக்கும் தேவராயா திரைப்படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் கிச்சா சுதீப் நல்ல கதையசமுள்ள திரைப்படங்களில் நடித்து தனக்கென வணிகத்தையும் ரசிகர்களையும் உருவாக்கியுள்ளார்.2012-ல் வெளியான நான் ஈ திரைப்படம் கன்னட நடிகராக இருந்த சுதீப்பை தென்னிந்தியளவில் பிரபலப்படுத்தியது. தற்போது, இவர் நடிக்கும் திரைப்படங்கள் பான் இந்திய வெளியீடாகவே திரைக்கு வருகின்றன.இறுதியாக, மேக்ஸ் என்கிற வெற்றிப்படத்தைக் கொடுத்தார். மார்க் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக வெற்றியை அடைந்தது. தற்போது, அனூப் பந்தாரி இயக்கத்தில் பில்லா ரங்கா பாட்ஷா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். Experience the rise of Devaraaya https://t.co/8JGsoMIWJmOn a day filled with love, I share something very special. ❤️A character rooted in history.A king whose legacy echoes through time.A journey I’m truly honoured to be a part of *Sri Krishna Devaraaya*The journey… pic.twitter.com/s4y4IVX0ze— Kichcha Sudeepa (@KicchaSudeep) September 2, 2026 இந்த நிலையில், கிச்சா சுதீப்பின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விஜயநகர பேரரசரான கிருஷ்ணதேவராயர் வாழ்க்கைக் கதையில் தேவராயராக கிச்சா சுதீப் நடிக்கிறார். தேவராயா எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் இயக்குநர் யாரென அறிவிக்கப்படவில்லை. ஆனால், இப்படம் 2027 டிசம்பர் வெளியீடாகத் திரைக்கு வரும் என்பதைக் கூறியுள்ளனர். மாரி செல்வராஜ் தயாரிப்பில் நடிக்கும் அமீர்!The trailer for the movie Devaraya, starring actor Kiccha Sudeep in the lead role, has been released.