மாமனாரிடம் கேளுங்கள்! அப்பாவ காணோம்! பேரவையில் ஆதவ் - உதயநிதி கடும் வாக்குவாதம்!

Wait 5 sec.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவையில் இன்றுமுதல் பட்ஜெட் உரை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.இந்த விவாதத்தின் போது, திமுக பொருளாளர் உள்பட அக்கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் சாராய ஆலை நடத்துவதாக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.அப்போது திமுக எம்.எல்.ஏ.க்கள் உங்கள் மாமனார் லாட்டரி நிறுவனம் நடத்துகிறார் என்று கூச்சலிட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவரை நோக்கி கேள்வி எழுப்பிய ஆதவ் அர்ஜுனா, லாட்டரி நிறுவனத்திடம் இருந்து நன்கொடையாக ரூ. 900 கோடி வாங்கியது ஏன்? தைரியம் இருந்தால் கூறுங்கள் எனக் கேட்டார்.இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “லாட்டரி நிறுவனத்திடம் இருந்து திமுக நன்கொடை வாங்கியது ஏன்? என அமைச்சர் கேள்வி எழுப்புகிறார். அந்த நிறுவனத்தை நடத்தும் அவரது மாமனாரிடம் கேட்டு விளக்கத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜுனா, “அது உங்க அப்பாவுக்கு மட்டும்தான் தெரியும். அவரிடம்தான் கேட்க வேண்டும். உங்க அப்பாவ இங்க காணோம். வீட்டுக்கு சென்று அப்பாவிடம் கேளுங்கள். வாங்கியது ஏன் என்று அப்பா சொல்வார்” எனத் தெரிவித்தார்.Heated argument exchange between Minister Aadhav Arjuna and TN LoP Udhayanidhi Stalin in the TN Assembly.