நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வெளியான “நூறு சாமி” திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து, மூத்த இயக்குநர் சசியின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “நூறு சாமி”. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவானது. கணவனை இழந்த பெண்ணுக்கு அவரது மகன் மறுமணம் செய்து வைக்க முயற்சிப்பதும், அதற்கு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் கதைகளமாகக் கொண்ட இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் ஸ்வாசிகா, அஜய் திக்ஷன், கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பும் பேசப்பட்டது. இந்த நிலையில், இப்படம் இன்று ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது. துப்பாக்கி முனையில் ஒரு ரோஜா... லோகேஷ் கனகராஜின் டிசி - திரை விமர்சனம்!The movie Nooru Saami, starring actor Vijay Antony, has been released on OTT.