கயாது - துல்கர் நடித்த படத்தின் முதல் பாடல் திங்கள்கிழமை (ஆக. 10) வெளியானது.மலையாளத்தில் ’ஆர்டிஎக்ஸ்’ திரைப்படத்தின் இயக்குநர் நஹால் ஹிதாயத் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாகவும் கயாது லோஹர் நாயகியாகவும் நடித்துள்ள படம் ’ஐ ஆம் கேம்’.சஸ்பென்ஸ் ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தை துல்கர் சல்மானே தயாரிக்கிறார்.இந்தப் படத்தில் நடிகர்கள் கதிர், ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, அன்பு, அறிவு சகோதரர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்றியுள்ளனர்.இந்த நிலையில், படத்தின் முதல் பாடலான ’அருகே அருகே’ இன்று வெளியானது.மேலும், இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.ரஷ்மிகாவின் காக்டைல் - 2 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!The first song from the movie starring Dulquer was released on Monday (Aug. 10).